SDPI யின் சென்னை துறைமுக தொகுதி சட்டமன்ற தேர்தல் பணிக்குழு 21-மார்ச்-2011 அன்று மாநில தலைமை அழுவலகத்தில் சந்தித்து தேர்தல் பிரச்சார வியூகங்களைப் பற்றி கலந்தாய்வு செய்தது. இதில் சென்னை துறைமுகம் தொகுதியின் தேர்தல் பணிக்குழு தலைவர் ரஃபீக் அவர்களும், தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன், தென்சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் அ.புஹாரி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது பிலால், காஞ்சிபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் 'விடியல்' சம்சுதீன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜாகிர் ஹுசைன், திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளர் அசன் முஹம்மது வாரிப், வடசென்னை மாவட்ட தலைவரும், சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளருமான S.அமீர் ஹம்ஸா மற்றும் வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ரஷீத் ஆகியோர் கலந்துகொண்டனர். இத்தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் SDPI யின் பிரச்சார வியூகம் குறித்தும், கட்சியின் வேட்பாளரை வெற்றிபெறச்செய்வதற்கான வழிவகைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment