சட்டமன்ற தேர்தல் 2011 - சென்னை துறைமுகம் தொகுதி

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ள, மாபெரும் தேசிய அரசியல் கட்சியான SDPI முடிவெடுத்து, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறது. தேர்தல் களப்பணிகள், நடைபெறும் முறைமை, பிரச்சாரம், மக்கள் சந்திப்பு குறித்த தொகுப்பு இத்தளம்.

Tuesday, 29 March 2011

SDPI - சென்னை துறைமுக தொகுதி தேர்தல் பிரச்சாரம் - நாள் 4

27-மார்ச்-2011, ஞாயிறு, காலை 10:30 மணி - SDPI யின் சென்னை துறைமுக தொகுதி 4 வது நாள் தேர்தல் பிரச்சாரம், முழுநாள் பிரச்சாரமாக‌ இரவு 10 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் SDPI யின் தொண்டர்கள் பலர் முழுமூச்சாக கலந்துகொள்ள தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்தது, SDPI யின் தேர்தல் அலுவலகம் உள்ள மண்ணடி லிங்கிசெட்டி தெருவிலிருந்து ஆரம்பித்து மண்ணடி தெரு வழியாக பிராட்வேயை அடைந்து, பிராட்வேயிற்கு மேற்கேயுள்ள தெருக்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள தெருக்களில் நடைபெற்றது. SDPI யின் வாக்கு சேகரிக்கவேண்டி அமைக்கப்பட்ட ஊர்தியிலேறி தன்னுடைய பிரச்சாரத்தை மேற்க்கொண்டார். வெயிலின் உக்கிரத்தையும் பொருட்படுத்தாமல் SDPI யின் வேட்பாளரும், அதன் தொண்டர்களும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்க்கொண்டது அவர்கள் கொண்ட கொள்கையின் உறுதியைக் காட்டுவதாய் இருந்தது.

மதிய வேளை நெருங்க பிரச்சாரம் சௌக்கார்பேட்டை, கொத்தவால் சாவடி மார்க்கட், கோழி மார்க்கட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்தது. பின்னர் மதியம் 2 மணியளவில் உணவு இடைவேளைக்காக தொண்டர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மாலை 4 மணியளவில் மீண்டும் பிரச்சாரம் தொடங்கியது. தொகுதியிலுள்ள மக்கள் ஒவ்வொருவரின் வீடுவீடாக மற்றும் கடை கடையாகச் சென்று SDPI யின் வேட்பாளர் வாக்குகளை சேகரித்தார். ஆண்ட, ஆளும் கட்சிகளின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பும், நம்பிக்கையற்ற நிலையும் அவர்களின் பேச்சுக்களில் தென்பட்டது.

இலவசங்களைக் கொடுத்து, மக்களின் வாழ்வியல் அத்தியாவசியங்களை நிறைவேற்ற முடியாத பெயர்தாங்கி திராவிட கழகங்கள் மீது நம்பிக்கையிழந்த மக்களுக்கு அவர்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பெற்றுத்த்ருவதே தனதும், தனது கட்சியான SDPI யின் நோக்கமென்றும் வேட்பாளர் வாக்குறுதியளித்தார். மேலும், பிற கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதிவாசிகளாக இல்லை, அவர்களால் துறைமுக தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு சேவையாற்ற முடியாது, தொகுதிவாசியாக உள்ள SDPI யின் வேட்பாளரால் மட்டுமே மக்களின் தேவைகளை புரிந்து, பணியாற்ற முடியும் என SDPI யின் வேட்பாளர் தெரிவித்தார்.

மீண்டும் மாலை 4:30 மணியளவில் தொடங்கிய தேர்தல் பிரச்சாரம் மாலை நேர தொழுகை வரை, துறைமுகம் ரேவு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. மாலை நேர தொழுகைக்குப் பின், இரவு 7 மணிக்குத்துவங்கிய பிரச்சாரம், பிராட்வே, ஏழு கிணறு பகுதிகளில் இரவு 10 மணிவரை நடைபெற்றது.

இந்த முழுனாள் பிரச்சாரத்தின் போது துறைமுகம் தொகுதி மக்கள் தங்களது மேலான் ஆதரவை SDPI யின் வேட்பாளருக்கு அளிப்பதாக வாக்குறுதியளித்தனர்.

No comments:

Post a Comment