சட்டமன்ற தேர்தல் 2011 - சென்னை துறைமுகம் தொகுதி

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ள, மாபெரும் தேசிய அரசியல் கட்சியான SDPI முடிவெடுத்து, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறது. தேர்தல் களப்பணிகள், நடைபெறும் முறைமை, பிரச்சாரம், மக்கள் சந்திப்பு குறித்த தொகுப்பு இத்தளம்.

Tuesday, 29 March 2011

SDPI - சென்னை துறைமுக தொகுதி தேர்தல் பிரச்சாரம் - நாள் 5

29-மார்ச்-2011, தேர்தல் பிரச்சார நாள் 5, சென்னை துறைமுக தொகுதி வேட்பாளரான P.முஹம்மது ஹுசைன் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது துறைமுகம் - பாரிமுனையிலுள்ள பர்மா பஜார் வியாபாரிகளை சந்தித்துப் பேசினார். பர்மா பஜார் வியாபாரிகள் தங்களது மேலான ஆதரவை SDPI யின் சென்னை துறைமுக தொகுதி வேட்பாளரான தனக்கு வழங்கி தன்னை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

SDPI யின் சென்னை துறைமுக தொகுதி வேட்பாளரான தான் வெற்றிபெறும் பட்சத்தில், வியாபாரிகளின் தேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்றித்தர பாடுபடுவதாக வாக்களித்தார்.

SDPI - சென்னை துறைமுக தொகுதி தேர்தல் பிரச்சாரம் - நாள் 4

27-மார்ச்-2011, ஞாயிறு, காலை 10:30 மணி - SDPI யின் சென்னை துறைமுக தொகுதி 4 வது நாள் தேர்தல் பிரச்சாரம், முழுநாள் பிரச்சாரமாக‌ இரவு 10 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் SDPI யின் தொண்டர்கள் பலர் முழுமூச்சாக கலந்துகொள்ள தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்தது, SDPI யின் தேர்தல் அலுவலகம் உள்ள மண்ணடி லிங்கிசெட்டி தெருவிலிருந்து ஆரம்பித்து மண்ணடி தெரு வழியாக பிராட்வேயை அடைந்து, பிராட்வேயிற்கு மேற்கேயுள்ள தெருக்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள தெருக்களில் நடைபெற்றது. SDPI யின் வாக்கு சேகரிக்கவேண்டி அமைக்கப்பட்ட ஊர்தியிலேறி தன்னுடைய பிரச்சாரத்தை மேற்க்கொண்டார். வெயிலின் உக்கிரத்தையும் பொருட்படுத்தாமல் SDPI யின் வேட்பாளரும், அதன் தொண்டர்களும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்க்கொண்டது அவர்கள் கொண்ட கொள்கையின் உறுதியைக் காட்டுவதாய் இருந்தது.

மதிய வேளை நெருங்க பிரச்சாரம் சௌக்கார்பேட்டை, கொத்தவால் சாவடி மார்க்கட், கோழி மார்க்கட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்தது. பின்னர் மதியம் 2 மணியளவில் உணவு இடைவேளைக்காக தொண்டர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மாலை 4 மணியளவில் மீண்டும் பிரச்சாரம் தொடங்கியது. தொகுதியிலுள்ள மக்கள் ஒவ்வொருவரின் வீடுவீடாக மற்றும் கடை கடையாகச் சென்று SDPI யின் வேட்பாளர் வாக்குகளை சேகரித்தார். ஆண்ட, ஆளும் கட்சிகளின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பும், நம்பிக்கையற்ற நிலையும் அவர்களின் பேச்சுக்களில் தென்பட்டது.

இலவசங்களைக் கொடுத்து, மக்களின் வாழ்வியல் அத்தியாவசியங்களை நிறைவேற்ற முடியாத பெயர்தாங்கி திராவிட கழகங்கள் மீது நம்பிக்கையிழந்த மக்களுக்கு அவர்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பெற்றுத்த்ருவதே தனதும், தனது கட்சியான SDPI யின் நோக்கமென்றும் வேட்பாளர் வாக்குறுதியளித்தார். மேலும், பிற கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதிவாசிகளாக இல்லை, அவர்களால் துறைமுக தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு சேவையாற்ற முடியாது, தொகுதிவாசியாக உள்ள SDPI யின் வேட்பாளரால் மட்டுமே மக்களின் தேவைகளை புரிந்து, பணியாற்ற முடியும் என SDPI யின் வேட்பாளர் தெரிவித்தார்.

மீண்டும் மாலை 4:30 மணியளவில் தொடங்கிய தேர்தல் பிரச்சாரம் மாலை நேர தொழுகை வரை, துறைமுகம் ரேவு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. மாலை நேர தொழுகைக்குப் பின், இரவு 7 மணிக்குத்துவங்கிய பிரச்சாரம், பிராட்வே, ஏழு கிணறு பகுதிகளில் இரவு 10 மணிவரை நடைபெற்றது.

இந்த முழுனாள் பிரச்சாரத்தின் போது துறைமுகம் தொகுதி மக்கள் தங்களது மேலான் ஆதரவை SDPI யின் வேட்பாளருக்கு அளிப்பதாக வாக்குறுதியளித்தனர்.

சென்னை துறைமுகம் தொகுதி - தேர்தல் வேட்பாளர் மாற்றம்

SDPI போட்டியிடும் சென்னை துறைமுகம் தொகுதியில் கட்சியின் சட்டமன்ற‌ வேட்பாளரான S.அமீர் ஹம்ஸா அவர்களின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் சில காரணங்களை மேற்க்கோள் காட்டி நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன் அவர்களது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை துறைமுக தொகுதி வேட்பாளரான P.முஹம்மது ஹுசைன் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

SDPI - சென்னை துறைமுக தொகுதி தேர்தல் பிரச்சாரம் - நாள் 3

SDPI யின் சென்னை துறைமுக தொகுதியில் 3 வது நாள் தேர்தல் பிரச்சாரம் 26-மார்ச்-2011, சனிய‌ன்று காலை 10 மணியளவில் துவங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்தது. தொண்டர்கள் பலர் கலந்துகொள்ள தேர்தல் பிரச்சாரம், SDPI யின் தேர்தல் அலுவலகம் உள்ள மண்ணடி லிங்கிசெட்டி தெருவிலிருந்து ஆரம்பித்து ஈத்கா பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள தெருக்களில் நடைபெற்றது. தொகுதியிலுள்ள மக்கள் ஒவ்வொருவரின் வீடுவீடாக மற்றும் கடை கடையாகச் சென்று SDPI யின் வேட்பாளர் வாக்குகளை சேகரித்தார்.

பிற கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதிவாசிகளாக இல்லை, அவர்களால் துறைமுக தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு சேவையாற்ற முடியாது, தொகுதிவாசியாக உள்ள SDPI யின் வேட்பாளரால் மட்டுமே மக்களின் தேவைகளை புரிந்து, பணியாற்ற முடியும் என SDPI யின் வேட்பாளர் தெரிவித்தார்.

SDPI - சென்னை துறைமுக தொகுதி தேர்தல் பிரச்சாரம் - நாள் 2

SDPI யின் சென்னை துறைமுக தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் 25-மார்ச்-2011, வெள்ளிய‌ன்று காலை 10 மணியளவில் துவங்கப்பெற்றது. தொண்டர்கள் பலர் கலந்துகொள்ள தேர்தல் பிரச்சாரம், SDPI யின் தேர்தல் அலுவலகம் உள்ள மண்ணடி லிங்கிசெட்டி தெருவிலிருந்து ஆரம்பித்து அருகிலுள்ள தெருக்களில் நடைபெற்றது. மாற்றத்தை விரும்பி முன் நிற்கும் துறைமுகத் தொகுதி வாழ் பொதுமக்கள் தங்களது மேலான ஆதரவை SDPI யின் வேட்பாளருக்கு வழங்குவதாக வாக்களித்தனர். தொகுதியிலுள்ள மக்கள் ஒவ்வொருவரின் வீடுவீடாகச் சென்று SDPI யின் வேட்பாளர் வாக்குகளை சேகரித்தார்.

சென்னை துறைமுக தொகுதி தேர்தல் பிரச்சாரம் - நாள் 1

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு SDPI யின் சென்னை துறைமுக தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் 24-மார்ச்-2011, வியாழக்கிழமை அன்று துவங்கப்பெற்றது. பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொள்ள தேர்தல் பிரச்சாரம், SDPI யின் தேர்தல் அலுவலகம் உள்ள லிங்கிசெட்டி தெருவிலிருந்து ஆரம்பித்து அருகிலுள்ள அங்கப்பநாயக்கன், தம்புசெட்டி முதலிய தெருக்களில் நடைபெற்றது. துறைமுகத் தொகுதி வாழ் பொதுமக்கள் தங்களது மேலான ஆதரவை SDPI யின் வேட்பாளருக்கு வழங்குவதாக வாக்களித்தனர்.

Wednesday, 23 March 2011

SDPI - சென்னை துறைமுக தொகுதி தேர்தல் பணிக்குழு சந்திப்பு

SDPI யின் சென்னை துறைமுக தொகுதி சட்டமன்ற தேர்தல் பணிக்குழு 21-மார்ச்-2011 அன்று மாநில தலைமை அழுவலகத்தில் சந்தித்து  தேர்தல் பிரச்சார வியூகங்களைப் பற்றி கலந்தாய்வு செய்தது. இதில் சென்னை துறைமுகம் தொகுதியின் தேர்தல் பணிக்குழு தலைவர் ரஃபீக் அவர்களும், தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன், தென்சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் அ.புஹாரி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது பிலால், காஞ்சிபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் 'விடியல்' சம்சுதீன், திருவள்ளூர் மாவட்ட தலைவர்  ஜாகிர் ஹுசைன், திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளர் அசன் முஹம்மது வாரிப், வடசென்னை மாவட்ட தலைவரும், சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளருமான S.அமீர் ஹம்ஸா மற்றும் வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ரஷீத் ஆகியோர் கலந்துகொண்டனர். இத்தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் SDPI யின் பிரச்சார வியூகம் குறித்தும், கட்சியின் வேட்பாளரை வெற்றிபெறச்செய்வதற்கான வழிவகைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார துவக்கக் கூட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தல் 2011 - சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார துவக்கக் கூட்டம் 22-மார்ச்-2011 அன்று ராயபுரம், ஃப்ரூக் மஹாலில் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு துவங்கிய கூட்டத்தை SDPI யின் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்கள் துவங்கி வைத்தார். வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ரஷீத் அவர்கள் முகவுரையாற்றினார். காஞ்சிபுரம் மாவட்ட பொதுச்செயளாலர் 'விடியல்' சம்சுதீன், திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயளாலர் அசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் புஹாரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, முறையே தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தலைவர்கள் P.முஹம்மது ஹுசைன், முஹம்மது பிலால், ஜாகிர் ஹுசைன், மேலும் சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளரும், வடசென்னை மாவட்ட தலைவருமான அமீர் அவர்களும் சிறப்புரையாற்றினர். இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்டின் மா நில செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி மற்றும், பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துறை வழங்கினார்கள்.

தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன் அவர்கள் உறையாற்றிய பொழுது, தமிழக மக்களின் வாழ்வினை சீர்குழைத்த, முன்னேறவிடாமல் தடுத்த திராவிட கட்சிகள் தமிழக மக்களுக்காக ஒருபோதும் உழைத்ததில்லை இனிமேலும் உழைக்கப்போவதுமில்லை. உண்மையாக உழைக்கக்கூடியது SDPI மட்டுமே என்றார்.

திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் உறையாற்றிய பொழுது, இது ஒரு சவாலான தேர்தல் எனவும், இத்தேர்தலில் நாம் நம்முடைய அனைத்து தியாகங்களையும் செய்து உண்மையாக உழைப்போமெனில் நாம் சாதிக்கப்போவது உறுதி. அதற்கு இறைவன் துணை நிற்ப்பான் என்று கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது பிலால் அவர்கள் பேசியபொழுது, துயர்நீங்காத தமிழக மக்களை துயரிலிருந்து மீட்கவே SDPI பாடுபடும் எனக் கூறினார். மேலும் கேரளாவில் 98 இடங்களிலும், தமிழகத்தில் 6 இடங்களிலும், மேற்கு வங்கத்தில் 8 இடங்களிலும், அஸ்ஸாமில் SDPI யின் ஆதரவு பெற்ற AUDF (அஸ்ஸாம் யுனைடெட் டெமாக்ரடிக் ஃபிரண்ட்) 48 இடங்களிலும் களமிறங்குவது இந்திய அரசியலில் ஒரு மாபெரும் மைல்கல் என்று குறிப்பிட்டார்.


பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் ஆகியோர் வாழ்த்துறை வழங்குகையில் பாப்புலர் ஃப்ரண்ட் எஸ்.டி.பி.ஐ போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் கட்சியின் வெற்றிக்காக அயராது உழைக்கும் என்று வாக்குறுதி அளித்தனர்.



சென்னை துறைமுக தொகுதி வேட்பாளர் S.அமீர் ஹம்ஸாவை மாநில தலைவர் தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தியபொழுது

பின்னர் பேசிய SDPI யின் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்கள், இன்று இந்தியர்கள் - குறிப்பாக வஞ்சிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கக்கூடிய, நம்பிக்கைகுகந்த‌ கட்சியாக SDPI திகழ்கிறது, மேலும் சென்னை துறைமுக தொகுதியை தேர்ந்தெடுத்தது, அடுத்து வரும் காலங்களில் சட்டமன்றத்தை அடையவே என்றும் உரைத்தார். மேலும் பேசுகையில், மக்களின் பரிதாப நிலையையும், அரசியல் சமுதாயத்தினருடைய பார்வையில் புரிந்துகொள்ளப்படுதலும் மிகவும் கவலையளிப்பதாகக் கூறினார். பின்னர் துறைமுக தொகுதி வேட்பாளரான அமீர் அவர்களை அனைத்து தொண்டர்களுக்கு மத்தியில் அறிமுகம் செய்து வைத்து, வெற்றி வேட்பாளரான அமீர் அவர்களை, வெற்றிபெறச்செய்வதில் அனைவரும் முழுமூச்சுடன் செயல்படவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியின் போது தமிழன் தொலைக்காட்சிக்கு மாநில தலைவர் அளித்த பேட்டியின் போது


இறுதியாக தேர்தலில் வெற்றியும் நமதே! வருங்காலத்தில் சட்டசபையும் நமதே!! என்று தனது நன்றியுரையை R.K.நகர் தொகுதிச்செயலாளர், சகோதரர்  திரு.இரத்தினம் அவர்கள் ஆற்றி, வந்திருந்த அனைத்து தொண்டர்களுக்கும் தேர்தல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

SDPI - சென்னை துறைமுக தொகுதி வேட்பாளர், வேட்புமனு தாக்கல்

SDPI போட்டியிடும் சென்னை துறைமுகம் தொகுதியில் கட்சியின் சட்டமன்ற‌ வேட்பாளர் S.அமீர் ஹம்ஸா கடந்த 19-மார்ச்-2011 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது SDPI யின் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்களும், தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது பிலால், திருவள்ளூர் மாவட்ட தலைவர்  ஜாகிர் ஹுசைன் ஆகியோர் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்குமுன் மாநில தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்த கட்சி தோழர்களை சந்தித்து அவர்களது வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.