02-ஏப்ரல்-2011, தேர்தல் பிரச்சார நாள் 9, சென்னை துறைமுக தொகுதிவேட்பாளரான P.முஹம்மது ஹுசைன் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் அங்கமாக துறைமுகம் தொகுதியிலுள்ள 25வது மற்றும் 26வது வட்டங்களிலுள்ள வாக்காளர்களை சந்தித்து தனது வாக்குகளை சேகரித்தார். பிரச்சார நாளின் முற்பகுதியில் 26வது வட்டத்தைச் சார்ந்த பகுதிகளிலும், நாளின் பிற்பகுதியில் 25வது வட்டத்தைச் சேர்ந்த மாஸ்கான் சாவடி, கோழி மார்க்கட், ஏழு கிணறு பகுதியிலுள்ள போர்துகீசிய சர்ச் தெரு முதலிய முக்கிய பகுதிகளில் தன்னுடைய வாக்குகளைச் சேகரித்தார்.
மக்களை சந்தித்து பேசுகையில் தான் ஒரு அரசியல்வாதி அல்ல, மாறாக சமுதாய மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு சாதாரண சமூகசேவகன் என்று குறிப்பிட்டார். மேலும் தமிழக மக்களை 45 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்த திரவிட கழகங்கள் மக்களுக்கு இலவசங்களைக் கொடுப்பதைப்போல் கொடுத்து ஏமாற்றி வந்திருக்கிறார்கள். ஒருபோதும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்ததில்லை. இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட மக்கள் தனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
SDPI யின் சென்னை துறைமுக தொகுதி வேட்பாளரான தான் வெற்றிபெறும் பட்சத்தில், மக்களின் தேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்றித்தர பாடுபடுவதாகவும், துறைமுக தொகுதி மக்களின் கோரிக்கைகளை தமிழக சட்டமன்றத்தில் ஒலிக்கச்செய்வேன் என்றும் வாக்களித்தார்.

No comments:
Post a Comment