03-ஏப்ரல்-2011, தேர்தல் பிரச்சார நாள் 10, சென்னை துறைமுக தொகுதிவேட்பாளரான P.முஹம்மது ஹுசைன் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் அங்கமாக துறைமுகம் தொகுதியிலுள்ள 80வது வட்டத்திலுள்ள வாக்காளர்களை சந்தித்து தனது வாக்குகளை சேகரித்தார். முற்பகலில் 80வது வட்டத்தைச் சார்ந்த சத்தியவாணி முத்து நகர் - கிழக்கு கூவம் பகுதியிலும் நாளின் பிற்பகுதியில் எல்லிஸ் ரோடு, தாயார் சாகிப் தெரு, பாலமுத்து தெரு, முக்தாருன்னிசா தெரு போன்ற முக்கிய பகுதிகளிலும் தன்னுடைய வாக்குகளைச் சேகரித்தார்.
கூவம் பகுதியில் வசிக்கும் ஏழ்மையான மக்களை சந்தித்து பேசுகையில் தான் ஒரு அரசியல்வாதி அல்ல, மாறாக தானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரணமான தொழிலாளிதான் என்றும், உங்களின் தேவைகளை நல்ல முறையில் அறிந்தவன், ஆகவே சமுதாய மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு உங்களுக்காக பாடுபடக்கூடிய ஒரு சமூகசேவகன் தான் என்றும் குறிப்பிட்டார். மேலும் தமிழக மக்களை 45 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்த திராவிட கழகங்கள் ஒருபோதும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்ததில்லை. இத்தகைய நம்பிக்கை துரோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட மக்கள் தனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மக்களுக்கு இலவசங்களைக் கொடுப்பதைப்போல் கொடுத்து ஏமாற்றி வரும் திருடர்களுக்கு மத்தியில் சாதாரண முறையில் மக்களின் உண்மை தேவைகளை எடுத்துரைத்து, அவற்றின் பால் மக்களுக்கு சிறந்த நலனை நல்கிட தனக்கு ஒரு வாய்ப்புத்தருமாறு கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a Comment