| துறைமுக தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், ஏழு கிணறு பகுதி |
வடசென்னை மாவட்ட செயலாளர் ஜாகிர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். RK நகர் பகுதி செயலாளர் சகோதரர் திரு.இரத்தினம் அவர்கள் முன்னிலை வகித்தார்.
SDPI யின் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்கள் உரையாற்றும் பொழுது, துறைமுக தொகுதியின் வாக்காளர்கள் அனைவரும் இதுவரை ஏமாற்ற்ப்பட்டது போதும், இனிமேலும் ஏமாற வேண்டாம். ஏமாறவேண்டாமெனில் அனைவரும் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் வாக்களிக்குமாறு, வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
| மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்கள் உரையாற்றும் பொழுது |
| துறைமுக தொகுதியின் வேட்பாளரான P. முஹம்மது ஹுசைன்அவர்கள் அறிமுகத்தின்போது |
துறைமுக தொகுதியின் வேட்பாளரான P. முஹம்மது ஹுசைன்அவர்கள் பேசுகையில், பிறர் கூறுவதைப்போல SDPI ஒன்றும் புதிதாக முளைத்த கட்சியல்ல. மாறாக மக்களினூடே, மக்களுக்காக பல வருடங்களாக சேவை செய்துவிட்டு, மக்கள் படும் துன்பங்களை சகிக்க முடியாமல், மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்ற அடிப்படையில் துவங்கப்பட்டதாகும். SDPI இருக்கும் வரையில் இனி எந்த ஒரு அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றுவதைப் பார்த்துக்கொண்டு இருக்காது, மக்களோடு கைகோர்த்து அவர்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவதில் முனைப்புடன் செயல்படும் என்றார்.
![]() |
| பொதுக்கூட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்ட மக்கள் |
இப்பொதுக்கூட்டத்தில் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டம் நடைபெற்ற பூங்காவினருகிலுள்ள பொது மக்களும் SDPI யின் கருத்துக்களை வரவேற்றனர். தென்சென்னை மாவட்ட பொதுசெயலாளர் புஹாரி அவர்கள் பொதுக்கூட்டத்திற்க்கு வருகை புரிந்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

No comments:
Post a Comment