சட்டமன்ற தேர்தல் 2011 - சென்னை துறைமுகம் தொகுதி

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ள, மாபெரும் தேசிய அரசியல் கட்சியான SDPI முடிவெடுத்து, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறது. தேர்தல் களப்பணிகள், நடைபெறும் முறைமை, பிரச்சாரம், மக்கள் சந்திப்பு குறித்த தொகுப்பு இத்தளம்.

Saturday, 14 May 2011

சென்னை துறைமுகம் வாக்காளப் பெருமக்களுக்கு SDPI யின் மனமார்ந்த‌ நன்றி!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் SDPI
சமூக நலனை மட்டுமே முன்னிறுத்தி தனித்துப் போட்டியிட்டது மக்கள் அனைவரும் அறிந்ததே.கட்சி துவங்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் இந்தத் தேர்தலைச் சந்தித்த SDPI, சென்னை துறைமுகம் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இது சென்னை துறைமுகம் தொகுதி வாழ் மக்கள் SDPI யின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பறைசாற்றுவதாக அமைந்தது.


மக்களின் பேராதரவால்  சென்னை துறைமுகம் தொகுதிகயில் SDPI நான்காவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

பெரும் திராவிட கட்சிகளாக(?) தங்களை காண்பித்துக்கொள்ளும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க விற்கு சிம்மசொப்பணமாக, சவாலாக‌ களத்தில் நின்றது SDPI. அதுவும் தி.மு.க.வுக்கெதிரான கடுமையான எதிர்ப்பலையிலும் SDPI க்கு இந்த வாக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்று SDPI சிறிதும் துவண்டுவிடவில்லை. மாறாக, SDPI க்குக் கிடைத்த கணிசமான வாக்குகள் இன்னும் அதிகம் சமுதாயத்திற்காக உழைத்திட வேண்டும் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தி, உற்சாகமூட்டி சிறந்த‌ ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தந்துள்ளது.

SDPI க்காக வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கும், அதன் வெற்றிக்காக இறைவனிடம் பிரார்த்தித்தவர்களுக்கும், அயராது உழைத்த கர்ம வீரர்களுக்கும், அனைத்து வகையிலும் SDPI க்கு ஆதரவளித்து, உதவிகள் பல புரிந்த நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.எதிர் வரும் காலங்களிலும் SDPI க்கு தங்களது உதவிகளையும், ஒத்துழைப்பையும், ஆதரவையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

மீண்டும் நன்றிகள் பல‌.

SDPI - சென்னை துறைமுக தொகுதி தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த 14வது தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் SDPI கணிசமான வாக்கு வங்கியை பெற்றிருப்பதை பறைசாற்றுவதாக உள்ளது. சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்திற்க்கு, அவர்களது எண்ணிக்கை அடிப்படையினாலான அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த தேர்தலை சந்திதது SDPI. முஸ்லிம் சமுதாயத்தின் எண்ணிக்கை அடிப்படையில் 25 தொகுதிகள் ஒதுக்கப்படவேண்டும் என்ற SDPI யின் கோரிக்கையை ஏற்க மறுத்த திராவிட கட்சிகள்(?) இன்று SDPI முன்வைத்த‌ கோரிக்கையின் வலிமையை புரிந்து கொள்ள இந்த தேர்தல் முடிவுகள் சிறந்த தருணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல தொகுதிகளில் SDPI யின் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள், பிற கட்சி வேட்பாளர்களின் வெற்றி-தோல்வி யின் சதவிகிதத்தை நிர்ணயிப்பதாக அமைந்தது. அதிலும் குறிப்பாக சென்னை துறைமுகம் தொகுதியில் SDPI யின் வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பது பிற தேசிய கட்சிகளுக்கு(?) வயிற்றில் புளியை கரைப்பதாக அமைந்தது.

SDPI யின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, தேச நலனுக்கும், தேச மக்களின் நலனுக்கும் SDPI யினால் மட்டுமே உண்மையாக உழைக்க முடியும் என்று வாக்களித்த மக்களின் கனவை நினைவாக்கும் என்பது திண்ணம்.

Tamil Nadu - harbour
Result Declared
Candidate PartyVotes
KARUPPIAH .PALAAll India Anna Dravida Munnetra Kazhagam53920
ALTAF HUSSAINDravida Munnetra Kazhagam33603
JAISANKAR MBharatiya Janata Party4663
MOHAMED HUSSAIN PSOCIAL DEMOCRATIC PARTY OF INDIA2237
PRAVEEN MAHESHWARIIndependent761
PUSHPARANI GIndiya Jananayaka Katchi291
CHANDRA KUMAR DIndependent211
AMEER JOHN KIndependent210
BABU M DIndependent206
HANUMANTHARAO GIndependent98
SYED IBRAHIM AIndependent88
SAKTHIVEL DIndependent88
CHAN BASHAIndependent53
SATHYANARAYANAN D @ MERCURY SATHYAIndependent46